பெரியகுளம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு மதுபாட்டில்களுக்கு மாலை அணிவித்து வழிபட்டதால் குடிமகன்கள் வியப்படைந்தனர்.
தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் வழிபாடு நடைபெற்றது. அங்கு தாங்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தொழிலாளர்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இந்நிலையில் பெரியகுளம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையில் வாழை மரம் மற்றும் மாவிலை கட்டி , மாலை அணிவித்து வழிபட்டனர். அதோடு மதுபாட்டில்களுக்கும் மாலை அணிவித்து தீபாராதனை காட்டினர் .
கடைக்கு வந்த குடிமகன்கள் இதை பார்த்து வியப்படைந்தது மட்டுமல்லாமல் அதனை படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது குறித்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் கூறுகையில், எல்லோருமே அவரவர் வேலை செய்யும் இடங்களில் ஆயுத பூஜை கொண்டாடுகின்றனர். அதன்படி நாங்களும் இப்படி கொண்டாடுகிறோம் என்றனர்.