நம் நாட்டின் மரியாதையையும், அமைதியையும் உறுதி செய்யவேண்டும் என்றால் ராணுவ வீரர்களுக்கு தெரிந்த மொழியில் நாம் பேச வேண்டும் என சீன தெரிவித்துள்ளார்.
கொரிய நாட்டின் போரில் சீனா நுழைந்ததன் 70ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதில் சீன நாட்டு அதிபர் அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றார். போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்திய பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்… ஆக்கிரமிப்பை தடுக்கவும், படையெடுப்பை முறியடிக்கவும் கடந்த காலங்களில் நாம் போராடி உள்ளோம்.
இனியும் தொடர்ந்து போராடுவோம். வீரர்கள் ஆற்றலோடு களத்தில் நின்று போரை சந்திக்க வேண்டும், அது மட்டுமே மக்களின் உரிமையை பெற்றுத் தரும். கொரிய போரும் நமக்கு இதைத்தான் காட்டுகின்றது என அதிபர் ஜி ஜின்பிங் பேசினார். 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கொரியப் போர் நினைவில் சீன நாட்டின் அதிபர் பேசிய முக்கிய உரையாக இது பார்க்கப்படுகிறது.