டெல்லியில் மீண்டும் உயர்ந்து வரும் காற்று மாசின் காரணத்தினால் உயிர்வாழ தகுதியே இல்லாத தரமற்ற காற்றின் சூழல் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் சென்னையிலும் காற்று மாசு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் நாட்டு மக்களை பீதி அடைய வைத்திருந்த நிலையில் தற்போது அது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு குறைந்து வருகிறது. கொரோனாவில் இருந்து எப்போது முழுமையாக மீண்டு விடலாம், மக்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை நிலை மீண்டும் பழைய நிலைக்கு வந்து, உயிர் பயம் இல்லாமல் இருக்கும் என்று மக்கள் எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக காற்று மாசு இருந்து வருகிறது.