Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோஹித்தை கிண்டல் செய்த சேவாக் – கொந்தளித்த ரசிகர்கள் …!!

காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா கடந்த இரு போட்டிகளில் களமிறங்கவில்லை. இந்நிலையில் ரோகித் சர்மாவின் பிட்னஸ் குறித்து பேசிய முன்னாள் வீரர் சேவாக், ரோகித் சர்மாவை வடா பாவ் என அழைத்தார். இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் சேவாக்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ரோகித்சர்மா மட்டுமின்றி சவுரப் திவாரியையும் சமோசா பாவ் என சேவாக் கிண்டல் செய்துள்ளார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மும்பை அணி கலக்கிக் கொண்டு இருந்தாலும், ரோகித் சர்மா ஒரு சில போட்டியில் மட்டும் அடித்து விட்டு மற்ற ஏனைய போட்டிகளில் ரசிகர்களின் திருப்திக்கு ஏற்றவாறு ஆடவில்லை. இதனால் அவர் உடல் பிட்னஸ் இல்லை, உடல் பருமன் ஆகி விட்டார் என்றெல்லாம் ஏராளமான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் விரேந்திர சேவாக் உடல் பிட்னஸ் குறித்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |