திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவ படிப்பில் பி.சி/ எம்.பி.சி-க்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதியை ஆபத்தில் தள்ளியுள்ளது. ஏற்கனவே இருக்கும் 27 சத இட ஒதுக்கீட்டை தரவும் பாஜக அரசு மறுக்கிறது. அதிமுக அரசின் அடிமைத் தனத்தால் தமிழகத்துக்கு விழுந்த பெரிய அடி இது.
கமிஷன் அடிப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ள எடுபுடி அரசு வலுவான வாதத்தை எடுத்து வைக்காததன் மூலம் இட ஒதுக்கீட்டை அழிக்கத்துடிக்கும் பாஜகவுக்கு துணை போயுள்ளது என டுவிட் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் நேற்று வெளியாகிய தீர்ப்புக்கு அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்து, கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசிய இந்த கருத்தும் அரசியல் ரீதியாக விவாதிக்கப்பட்டுள்ளது.
பட்டியலின மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டையும் தர முடியாது என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததன் மூலம் பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட – பட்டியலின மாணவர்கள் மருத்துவம் படிக்கவேக்கூடாது – அரியவகை ஏழைகள் மட்டும் படித்தால் போதும் என்று பாஜக அரசு சொல்லாமல் சொல்லியுள்ளது. 2/3
— Udhay (@Udhaystalin) October 26, 2020