Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு மிக வருத்தமாக உள்ளது – நொந்து போன உதய்… ட்விட்டில் உருக்கம் ஏன் தெரியுமா ?

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும், சிறந்த களப்பணியாளருமான விராலி மலை கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த சகோதரர் எம். பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அவரின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலை தெரிவித்துதந்துள்ளேன் என ட்வீட் செய்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருகின்றது. இன்னும் ஆறு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட இருக்கிறது. இந்த நிலையில்தான் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், டுவிட்டரில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அரசியல் கட்சி கூட்டமாக இருந்தாலும் சரி, கட்சியில் நட நிகழ்வுகளாக இருந்தாலும், இன்ப – துன்ப நிகழ்வாக இருந்தாலும் ட்விட்டரில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |