வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி இன்று தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்கின்றார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக நேற்று வாரணாசியில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.அங்கு இருக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனர் பண்டிட் மதன்மோகன் மால்வியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் மோடி பேரணியை தொடங்கினார்.
சுமார் 7 கிலோ மீட்டர் நடைபெற்ற இந்த பேரணியில் உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பா.ஜனதா மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில் காலை 9.30 மணிக்கு பாஜக வாக்குச்சாவடி அளவிலான தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்தாலோசிக்கின்றார். அதனை முடித்து விட்டு 11 மணிக்கு காலபைரவர் கோவிலில் வழிபாடு நடத்தி விட்டு காலை 11.30 மணி அளவில் பிரதமர் மோடி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.