Categories
உலக செய்திகள்

இன்று பேச்சுவார்த்தை…. உற்றுநோக்கும் சீனா… முடிவெடுக்க போகும் அமெரிக்கா, இந்தியா …!!

இந்தியா மற்றும் அமெரிக்கா அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் எஸ்பர் பங்கேற்கின்றனர். பேச்சுவார்த்தையில் பங்கேற்க இரு அமைச்சர்களும் நேற்று காலை டெல்லி வந்திறங்கினர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் பங்கேற்கின்றனர்.

இந்தியாவுடன் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வரும் இந்த காலகட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுடன் இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவது சர்வதேச அளவிலும் பெரும் கவனத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இதில் இந்தியா – சீனா மோதல் விவகாரம் குறித்து எல்லாம் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |