Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுக்கு அதுலாம் இனிக்குது…. இது மட்டும் கசக்குதா ? யாரை ஏமாத்துறீங்க …!!

மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது பற்றி மே 17 இயக்கம் சேர்ந்த திருமுருகன் காந்தி வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர்க,நாடார், யாதவர், முத்தரையர்  குழந்தைகளின் படிப்பிற்கு கொள்ளி வைத்துவிட்டு யாரை ஏமாற்ற ”வேல்யாத்திரையை” துவங்குகிறது பாஜக என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தமிழன் ஓட்டு இனிக்குது, தமிழரின் வரிப்பணம் இனிக்குது, தமிழனுக்கு கல்வி என்றால் கசக்குதா ? என்று ட்விட் செய்துள்ளார். மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் மறுத்து நேற்று தீர்ப்பளித்ததற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் திருமுருகன் காந்தியும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |