மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதிமுக – திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. என்றெல்லாம் தீர்ப்புக்கு கருத்து தெரிவித்து வந்த நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
50 சதவீத ஓபிசி இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று நீதிமன்றம் கூறியிருப்பது பெரும் வருத்தத்தை தருகிறது என கூறியுள்ளார். மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சிகள் இதற்க்கு கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.