ரஷ்ய சீனாவுடன் எதிர்காலத்தில் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக அதிபர் புடின் தெரிவித்துள்ளார்
அமெரிக்காவுடன் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு உள்ள உறவுமுறையில் பதற்றம் நிறைந்த சூழல் உருவாகியுள்ளதால் ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவிற்கு அதிகம் நெருக்கடி ஏற்படுத்துகின்றன. இதனிடையே அமெரிக்காவுடன் அணு ஆயுதங்கள் தொடர்பாக போடப்பட்ட ரஷ்யாவின் ஒப்பந்தம் அடுத்த வருடம் முடிவடைகிறது. ஆனால் ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பாக ரஷ்யா அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு உருவாக்கியுள்ளது. ஆனாலும் இரண்டு நாடுகளும் ஒப்பந்தத்தை நீடிப்பது தொடர்பாக கலந்துரையாடி வருகின்றன.
இந்நிலையில் பல நாட்டு கொள்கை நிபுணர்களுடன் தொலைக்காட்சி வாயிலாக அதிபர் புடின் கலந்துரையாடினார். அதில் பேசிய போது “சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் ராணுவ ரீதியான உறவு வலுவாக உள்ளது. சீன ராணுவத்தின் வலிமையை அதிகரிக்க செய்ய அது மிகவும் உதவிகரமாக இருக்கும். அதேநேரம் தற்போதைய நிலையில் சீனாவுடன் இராணுவக் கூட்டணி வைப்பதற்கான அவசியம் இல்லை. எதிர்காலத்தில் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளது அமெரிக்காவுடன் இருக்கும் அணு ஆயுத ஒப்பந்தத்தை மீட்கவே விரும்புகின்றோம் ஆனால் அமெரிக்கா தான் இதில் இறுதி முடிவை எடுக்க முடியும் எனக் கூறினார். இந்த அறிவிப்பு சர்வதேச அரசியல் அரங்கில் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.