Categories
மாநில செய்திகள்

வெற்றிவேல் யாத்திரைக்கான காப்பு கட்டும் நிகழ்ச்சி ….!!

வெற்றிவேலு யாத்திரை தமிழகம் முழுவதும் அறுபடை வீடுகளில் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னைா தியாகராய  நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வரும் நவம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ள வெற்றிவேல் யாத்திரைக்கான காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் பொதுச்செயலாளர் கரூர் நாகராஜன் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் பாஜக மாநில நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு காப்புக் கட்டிக் கொண்டார்கள். பின்னர் செய்திடும் பேசுகையில் எல். முருகன் பெண்களை இழிவுபடுத்தியவர்களுக்கு ஆதரவாக ஸ்டாலின் பேசுகிறார் எனவும்.

ஆனால் பாஜக தாய்மை மற்றும் பெண்மையை போற்றுகிறது எனவும் தெரிவித்தார். மேலும் சமூக நீதி பேசும் ஸ்டாலின் அவரது கட்சி எம்பிக்கள் தாழ்த்தப்பட்ட மக்களை கேவலப்படுத்தி பேசியது குறித்து இதுவரை கண்டிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். இந்து பெண்கள் குறித்து இழிவாக பேசிய திருமாவளவனை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

Categories

Tech |