அமெரிக்காவில் விளைவிக்கப்பட்ட மிகப் பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி அமைத்தது விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இடாகோ மாகாணத்தின் தலைநகர் போய்சில் உருளைக்கிழங்கு பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2012_ஆம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்_கிழங்கு ஓன்று பயிரிடப்பட்டது. சுமார் 28 அடி நீளம் மற்றும் 12 அடி அகலத்தில் 6 டன் எடையாக விளைந்த இந்த உருளைக் கிழங்கு உலகிலேயே மிகப் பெரிய உருளைக்கிழங்காக அறிவிக்கப்பட்ட்து. மேலும் பொதுமக்களின் பார்வைக்காக இந்த உருளைக்கிழங்கு ராட்சத லாரி மூலம் அமெரிக்கா முழுவதும் வலம் வந்தது.
இந்நிலையில் இந்த உருளைக் கிழங்கு இரட்டை படுக்கை வசதியை கொண்ட சிறிய அளவிலான தங்கும் விடுதியாக வினோதமாக மாற்றப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கை குடைந்து உருவாக்கப்பட்ட விடுதியில், சொகுசு இருக்கை , படுக்கை மற்றும் கழிவறை என அனைத்து வசதிகளும் உள்ளது. இது பார்வையாளர்களை மிக வெகுவாகக் கவர்ந்து பிரமிக்கவைத்துள்ளது. இந்த உருளைக்கிழங்கு விடுதியில் தங்க வேண்டுமென்றால் ஒருநாள் வாடகையாக சுமார் 200 டாலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.