Categories
தேசிய செய்திகள்

கடித்து, பென்சிலால் குத்திய தாய்… கதறி அழுத அக்கா…. பாசத்தில் தங்கை எடுத்த முடிவு ?

ஆன்லைன் வகுப்பில் கேள்விக்கு பதிலளிக்காத மகளை கடித்து பென்சிலால் குத்தி துன்புறுத்திய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளிகள் எப்போது திறக்கும் என்று அறிவிக்கப்படாமல் மூடப்பட்டது. இதுவரை சில மாநிலங்களில் மட்டுமே பள்ளிகள் திறக்கப் பட்டிருக்கும் நிலையில் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. எப்போதும் கையில் போனை வைத்திருப்பவர்கள் கூட ஆன்லைன் வகுப்பு என்று கூறினால் தலை தெறிக்க ஓட்டம் பிடிக்கின்றனர். ஆனால் அவர்களின் பெற்றோர்கள் வலுக்கட்டாயமாக குழந்தைகளை ஆன்லைன் வகுப்பில் திணிக்கின்றனர். இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளம் முடிவு எடுத்து விடுகின்றனர்.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியரின் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிறுமியின் தாய் பென்சில் வைத்து தனது மகளை குத்தியதோடு உடலில் பல இடங்களில் கடித்து கொடுமை செய்துள்ளார். இதனை பார்த்து வேதனை அடைந்த சிறுமியின் தங்கை குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் என்ஜிஓ அமைப்பை சேர்ந்த இருவர் சிறுமியின் வீட்டிற்கு வந்து தாயிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எந்த பதிலும் அவர் கூறாததால் மும்பை காவல்துறையினர் அந்தக் கொடூர தாய் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Categories

Tech |