நடப்பாண்டிலேயே மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர்கள் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிட முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என பலரும் கருதுகின்றனர்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் டி ஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு ஓபிசி பிரிவினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த அரசு உறுதுணையாக இருக்கும் என்று கூறிய மத்திய அரசு. உச்ச நீதிமன்றத்தில் இதற்கு எதிராக வாதமிட்டுருப்பதாக திமுக குற்றம் சாட்டியிருக்கிறது. வலுவான வாதத்தை எடுத்து வைக்காமல் அதிமுக அரசு தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையில் மத்திய அரசு தொடக்கத்திலிருந்தே ஓபிசி பிரிவினருக்கு எதிரான வாசகப்போக்கை மேற்கொண்டு வந்ததாக அவர் குற்றம் சாட்டிருக்கிறார். இந்த தீர்ப்பின் மூலம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரானது பாஜக அரசு என்பது நிறுவனமாக இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் குற்றம் சாட்டிருக்கிறார்.
மத்திய அரசு உச்சநீதிமன்றம் அகில இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவை இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக இருப்பதை இந்த தீர்ப்பு வெளிகாட்டி இருப்பதாக மருத்துவர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க முடியவில்லை என்றாலும் 27% விழுக்காடு இட ஒதுக்கீட்டையாவது நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.