Categories
உலக செய்திகள்

எங்கள் மக்களை சீண்டாதீங்க…! பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டோம்… துருக்கி ஜனாதிபதி திடீர் உத்தரவு …!!

பிரான்ஸ் நாட்டுப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் வேண்டுகோள் வைத்துள்ளார்

இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக பிரான்ஸ் எடுத்திருக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின்  பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தொலைக்காட்சி மூலம் நேரில் பேசிய துருக்கி அதிபர் “பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய மக்களுக்கு ஏதேனும் நெருக்கடி உருவானால் உலக நாடுகளின் தலைவர்கள் கண்டிப்பாக குரல் கொடுத்தாக வேண்டும். இஸ்லாமியர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

இஸ்லாமியத்திற்கு எதிராக மதச்சார்பின்மையை பாதுகாப்போம் என்று உறுதியளித்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவலை துருக்கி அதிபர் எர்டோகன் விமர்சித்தார். மேலும் பிரான்ஸ் நாட்டு பொருட்களை புறக்கணிக்குமாறு அரேபிய தலைவர்களுக்கு கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் குவைத், கட்டார் போன்ற நாடுகளில் உள்ள பல்பொருள் அங்கன்வாடிகளில் இருந்து பிரான்ஸ் நாட்டு உற்பத்தி பொருட்கள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமன்றி மீதமுள்ள வளைகுடா நாடுகளிலும் இந்த தடை தொடர்வதாக கூறப்படுகிறது.

Categories

Tech |