Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அராஜகத்துக்கு தலை வணங்க மாட்டோம் – கைது செய்யப்பட்ட குஷ்பு ட்விட் …!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். இந்நிலையில் அதில் பங்கேற்க சென்ற சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். சிதம்பரத்தில் பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்து. இந்த நிலையில் குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார்.

காரில் சிதம்பரம் நோக்கி சென்ற குஷ்புவை முட்டுக்காடு அருகே தடுத்து காவல்துறை கைது செய்திருக்கிறது. மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் குஷ்புவை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். குஷ்புவை போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். பின்னர், நாங்கள் அராஜகத்துக்கு ஒருபோதும் தலை வணங்க மாட்டோம். பெண்களின் கண்ணியத்தைக் காப்பாற்ற கடைசி மூச்சு வரை பாஜக போராடும் என குஷ்பு ட்விட் செய்துள்ளார்.

Categories

Tech |