தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் காலி தண்ணீர் பாட்டில்களை கொண்டு சுகாதார வளாகம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தூத்துக்குடி மாநகராட்சி அலுவலர்களுக்கு தண்ணீர் பாட்டில் இலவசமாக வழங்கப்பட்டது. அவர்கள் பயன்படுத்திய காலி பாட்டில்கள் அனைத்தும் மாநகராட்சி மூலம் சேகரித்து வைக்கப்பட்டு பெருமாள்புரம் திடக்கழிவு மேலாண்மை மையத்துக்கு கொண்டு வரப்பட்டன. இந்த காலி தண்ணீர் பாட்டில்களை கொண்டு சுகாதார வளாகம் மற்றும் குளியல் அறை கட்டும் பணியை சோதனை முயற்சியாக மேற்கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து , இதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து அரசின் ஒப்புதலை பெற்று உள்ளது.