தொழில்நுட்பத்தை தனதாக்கிக் கொண்டுள்ள இன்றைய கால உலகத்தில் பள்ளி படிக்கும் மாணவர்கள் ஒன்று, இரண்டு ஸ்மார்ட் போன்களை கையில் வைத்துக்கொண்டு உலா வருகின்றனர். இணையதள கல்வி உட்பட ஏராளமான நல்ல விஷயங்களை மொபைல் போனில் பயன்படுத்தும் வேளையில் அதிலிருக்கும் கேமுக்கு அடிமையாகி உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வும் தமிழகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் தற்போது, சத்தியமங்கலம் அருகே பப்ஜிக்கு அடிமையான 16 வயது அருண் என்ற சிறுவன் மன உளைச்சலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பதாம் வகுப்பு படித்த அருண் பப்ஜியால் பாதிக்கப்பட்டு கோவையில் தனியார் மருத்துமனையில் மனநல சிகிச்சை எடுத்து வந்ததாகவும் அவருடைய பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.