Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஒப்படைக்க கூடுதல் கட்டணம் …!!

ஈரோட்டில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஒப்படைக்க கூடுதல் கட்டணம் செலுத்தத் நிர்பந்திப்பதாக கூறி உறவினர்களுடன் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த ஓய்வு பெற்ற BSNL  ஊழியர் பிரகாஷ் உடல்நலக்குறைவால் ஈரோடு கொல்லம் பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை திருப்தி அளிக்காததால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

அப்போது பிரகாஷ் உயிரிழந்து விட்டதாகவும் கூடுதலாக 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை செலுத்திவிட்டு உடலைப் பெற்றுக்கொள்ளுமாறும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான உறவினர்களும் உயிரிழந்த பிரகாஷின் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகனும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |