ஜனவரி முதல் கொரோனா தடுப்பு ஊசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பெரும் தொற்று நோய்க்கு முடிவுகட்ட இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு சோதனை பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த மாத இறுதியில் முதற்கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிவுபெற்ற நிலையில். இரண்டாம்கட்ட பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு கடுமையான உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலைகள் தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்காக வருகின்ற ஜனவரி மாதத்தில் கிடைக்கும் என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அந்நிறுவனத்தின் பொதுசுகாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை தலைவர் உக்ஸாண்ட்ரால் டுயாகிய அக்லி இதனை தெரிவித்துள்ளார்.