தக்கலை பஸ் நிலையம் ராமன்பரம்பு பகுதியில் புகையிலை விற்றதாக போலீஸ்சார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம்; தக்கலை பஸ் நிலையம் ராமன் பரம்பு பகுதியில் இருக்கும் ஒரு கடையில் திடீரென தக்கலை சப் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு இருந்த 158 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர் மற்றும் போலீசார் ராமன் பரம பகுதியை சேர்ந்த 42 வயதுடைய முருகன் என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.