இந்தியா-அமெரிக்கா இடையே தகவல் பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
இன்று காலை நடந்த 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே தகவல் பரிமாற்றம் என்ற முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இரண்டு நாடுகளும் வரைபடங்கள் மற்றும் சேட்டிலைட் தரவுகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை பரிமாறிக் கொள்ளும். இதன் மூலமாக இந்தியா – அமெரிக்கா சாட்டிலைட்கள் மூலமாகவும், அதீத தொழில் நுட்பம் மூலமாகவும் இந்தியா எல்லைப் பகுதிகளிலேயே உள்ள பாதுகாப்பு எப்படி இருக்கிறது ? எதிரிகள் எந்த இடத்தில் இருக்கிறார்கள்? எந்த இடத்திற்கு நகர்கிறார்கள் ? போன்ற விஷயங்களை துல்லியமாக கவனித்து தெரிந்து கொள்ள முடியும்.
கிழக்கிலோ அல்லது மேற்கிலோ இந்தியாவுக்கு எதிராக ஏதேனும் ராணுவ நடவடிக்கைகள் இருந்தால் அதை கண்டறிந்து ஏவுகணைகள் மூலம் அல்லது விமானங்கள் மூலம் துல்லியமாக தாக்க முடியும். இந்தியா ஏற்கனவே கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்து இருக்கிறது. விரைவிலேயே விமானங்களையும் வாங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன இத்தகைய சூழ்நிலையில் இது மிகவும் முக்கியமான ஒப்பந்தமாக பார்க்கப்படுகின்றது.
பல நாட்களாக தொடர்ந்து தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை, ஆலோசனை நடந்த நிலையில் தற்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது. சீனாவின் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.