Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு – முதல்வர் அதிரடி அறிவிப்பு ….!!

நேற்று புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அந்த ஆலோசனை கூட்டத்தில், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

மேலும் 10 சத இட ஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத்த இருப்பதாக தெரிவித்த அவர், அமைச்சரவை கூட்டத்தின் முடிவை ஆளுநர் அனுமதிக்காக அனுப்பி வைத்துள்ளோம் எனவும் தெரிவித்தார். இதனால் தமிழகத்தைப் போல புதுவையிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Categories

Tech |