ஊரடங்கு நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் வருகிற 30-ஆம் நவம்பர் மாதம் முப்பதாம் தேதி வரை இந்த ஊரடங்கு நீக்கப்படுவதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்டுப்பாடுகளும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக மாநிலங்களுக்கிடையே தனிநபர்கள் மற்றும் போக்குவரத்துக்கான எந்தவித சிறப்பு அனுமதி ஆகியவற்றுக்கு முன் அனுமதி பெற வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
65 வயதிற்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் வழிகாட்டு நெறிமுறைகளான முக கவசம் அணிதல், 6 அடி இடைவெளி விட்டுச் செல்லுதல், கை கழுவுதல் உள்ளிட்டவற்றை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
கட்டுப்பாட்டுக்கு குறைவாக உள்ள பகுதிகளில் மாநில அரசு மத்திய அரசை கலந்தாலோசிக்காமல் எந்த வித கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது. அவ்வாறு விதித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு மாநில அரசு பல்வேறு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் முழுமையாக மாநில அரசும் பின்பற்ற வேண்டும் என ஒரு அறிவுறுத்தலும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.