நவம்பர் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் செப்டம்பர் 30 இல் வெளியிட்ட கட்டுப்பாடுகள் நவம்பர் 30ம் தேதி வரை தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து பயணத்திற்கு எவ்வித முன் அனுமதியும் பெற அவசியமில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல மாநிலங்களுக்கிடையே செல்ல அதிகாரியின் ஒப்புதல், இ-பாஸ் அவசியம் இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Categories