நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அக்டோபர் மாதத்திற்கான பொதுமுடக்கம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டது. தற்போது அக்டோபர் மாதம் நிறைவடைகிறது. எனவே நவம்பர் மாதத்திற்கான தளர்வுகள் என்ன என்பதை அறிவிக்க வேண்டும். தற்போது மத்திய அரசு என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால்? நவம்பர் 30-ஆம் தேதி வரை நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமுடக்கம் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்து இருக்கிறார்கள்.
மற்ற பொருளாதார நடவடிக்கை பொறுத்தவரை கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி என்னென்ன தவறுகள் கொடுக்கப்பட்டதோ… அதே தளர்வுகள் எந்தவிதமான மாற்றமும் இன்றி நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல நோய் கட்டுப்பாட்டு பகுதி பொறுத்தவரை அங்கு மிக கடுமையான வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சில குறிப்பிட்ட விஷயங்களுக்கு கட்டுப்பாடு என்பது தொடர்கிறது என்று அறிவித்தர்கள். குறிப்பாக சர்வதேச விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு தொடர் தொடர்கிறது என்று சொல்லப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட விமானங்களை தவிர சர்வதேச விமானப் பயணங்களுக்கு கட்டுப்பாடு தொடர்கிறது.
அதேபோல் சினிமா தியேட்டர்களை பொறுத்தவரை 50 சதவீத இருக்கைகளுடன் இயக்கப்பட வேண்டும் என்ற ஒரு வழிகாட்டு நெறிமுறைக் கொடுக்கப்பட்டது. இதுதவிர நீச்சல் குளங்கள் விளையாட்டு வீரர்களுடைய பயிற்சி நோக்கங்களுக்காக மட்டும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே அந்த கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் நவம்பர் மாதத்திற்கும் தொடரும், அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்து இருக்கின்றது.தேவைப்பட்டால் சூழ்நிலையை பொறுத்து புதிய மாற்றங்கள் அறிவிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்ததுள்ளது.