Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகையின்” கடிதம்” உருகி அழுத சிம்பு… என்ன எழுதியிருந்தது தெரியுமா…..?

நடிகர் சிம்பு தனது ரசிகை எழுதிய கடிதத்தை படித்ததும்  கண்கலங்கி   விட்டதாக மஹத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு தற்போது நடித்து கொண்டிருக்கும் படமானது ஈஸ்வரன் படம் ஆகும்.  இந்தப் படத்தில் நடிப்பதற்காக கடந்த சில மாதங்களாக அவர் கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் மாறி இருக்கிறார்.  அவரின் இந்த தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி இருக்கின்றனர். மேலும் சிம்பு இஸ் பேக் மகிழிச்சியுடன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சிம்புவின் ரசிகை ஒருவர் கடிதம் ஒன்றை எழுதி  தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  அந்தக் கடிதத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட ஒரிசாவை சேர்ந்த அந்த ரசிகை கூறியிருப்பதாவது;  எனக்கு கடந்த 3 நாட்களாக தொண்டை வலி, தலைவலி மற்றும் காய்ச்சல் இருப்பதால் என்னால் எதையும் பதிவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். வாழ்க்கை நிலையில்லாதது. அடுத்து என்ன நடக்கும் என்று  எனக்கு தெரியாது, எல்லாம் கடவுளின் கையில் உள்ளது. இந்த குறுஞ்செய்தி சிம்பு சாருக்காக.

சிம்பு ரசிகையின் டுவிட்டர் பதிவு

நீங்கள் மீண்டும் சமூக வலைதளத்திற்கு வந்தது எங்களுக்கு மனநிறைவை தந்துள்ளது. மோஷன் போஸ்டர் மெய்சிலிர்க்கவைத்தது, அதை பார்த்து பேச்சே வரவில்லை. என் வாழ்க்கையில் நீங்கள் மட்டும் தான் உத்வேகம் அளிக்கிறீர்கள். உங்களின் வசனங்கள், பாடல்கள், படங்கள் மூலம் எனக்கு நம்பிக்கை, அன்பு, உற்சாகம் அளிப்பதற்கு நன்றி.  மேலும் சிறந்தவர் என்று அதில் தெரிவித்துள்ளார்.  அவர் எழுதிய இந்த கடிதத்தை பார்த்த நடிகர் சிம்பு திடீரென்று கண் கலங்கி விட்டரர் என்று அவரின் நெருங்கிய நண்பரும் நடிகருமான மஹத் ராகவேந்திரா தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |