இன்னும் மூன்று மாதங்களுக்கு முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. முக கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் இருந்தாலும் சென்னையில் ஆரம்பத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
அதன் பிறகு கடுமையான நடவடிக்கைகளால் தொற்று கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் முன்னெச்சரிக்கை அவசியம் என்பதால் முக கவசம் அணிவதும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் இன்னும் மூன்று மாதங்கள் தொடரும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.