Categories
தேசிய செய்திகள்

ஆசிரியரை மதிக்கும் நாடு – 6-வது இடத்தில் இந்தியா…!!

சர்வதேச அளவில் ஆசிரியர்களை மதிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது என லண்டன் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வார்க்கி அறக்கட்டளை சார்பில் உலகில் ஆசிரியர்களின் நிலை குறித்து மக்களின் கருத்துகளை மதிப்பீடு செய்யும் ஆய்வு நடத்தப்பட்டது. உலகில் 35 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கவுரவம் அளிக்கும் நாடுகளின் பட்டியலில் சீனா, கானா, சிங்கப்பூர், கனடா மற்றும் மலேசியாவுக்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரம் பேரிடம் ஆசிரியர்கள் குறித்த கருத்துகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் நாடுகளை பட்டியலிட்டதில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிக  ஒதுக்கீடு செய்யும் நாடுகளில் ஆசிரியர்கள் நன்மதிப்புடன் இருக்கின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிற்கு  நடுவிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணிகளில் ஈடுபட்ட சிறந்த ஆசிரியர் பரிசு திட்டத்திற்கான பட்டியலில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கிராமத்தின் பள்ளி ஆசிரியர் ரஞ்சித் சிங் டிஸ்ஸலே பெயர் இடம் பெற்றுள்ளது.

Categories

Tech |