சென்னை புறநகர் பகுதியான கோவிலம் வடுநிலப்பகுதியில் 1,143 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் 4,034 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி முதற்கட்டமாக கூவம் மற்றும் அடையாறு வடிநிலப்பகுதிகளில் 406 கிலோமீட்டர் நீளத்திற்கு 1,387.27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் அம்மா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கோவலம் வடிநிலப்பகுதியில் m1, m2, m3, ஆகிய திட்டக் கூறுக்களுக்கு 360 கிலோ மீட்டர் நீளத்திற்கு 1,243.15 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ஜெர்மன் வங்கி நீதியில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இந்த திட்டம் முடிவடையும் போது பாலவாக்கம், கொட்டடிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் சுமார் 8 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.