தமிழக காவல்துறைக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மருது சகோதரர்கள் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை காளையார்கோவில் செல்வதற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த எல். முருகன் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தின் தெய்வங்களாக மதிக்கப்படும் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்களை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்த வந்த நிர்வாகிகளை தமிழக அரசு கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றார்.
50 சதவீத இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மத்திய அரசை குறை சொல்வதை சாடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூரிய எல். முருகன் கந்த சஷ்டி கவசத்தை கொச்சை படுத்தியவர்களையும், பெண்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசுபவர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையை திமுக மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.