Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்…!!

மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் மண்டை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் சுரேஷ் மண்டை உடைந்தது. அவரை சக மீனவர்கள் மீட்டு ராமேஸ்வரம் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். இலங்கை கடற்படை மீனவர்கள் தாக்குதலை அடுத்து பெரும் நஷ்டத்துடன் ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பினர். இலங்கை கடற்படை தாக்குதல் சம்பவம் ராமேஸ்வரம் மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |