Categories
அரசியல் மாநில செய்திகள்

தைரியம் இருக்கா உங்களுக்கு…. நேரடியாக வாங்க சந்திப்போம்…. விசிகவை கதற விட்ட குஷ்பு …!!

மிரட்டல் விடுவதை தவிர்த்து, தைரியம் இருந்தால் நேரடியாக வாங்க விவாதிப்போம் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, சென்னை எல்லை தாண்டிய உடனே செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குள் வந்ததும் எங்களை கைது செய்து விட்டார்கள். கடலூர் வர வாய்ப்பு கொடுப்பாங்கன்னு நினைச்சேன்.  அதற்க்கு முன்னதாகவே கைது செய்துவிட்டார்கள். இன்றைக்கு சிதம்பரம் மட்டுமல்ல தமிழகத்தில் ஒவ்வொரு இடத்திலும் நடந்த போராட்டம் விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரானது. இது கட்சி ரீதியாக நடந்த போராட்டம் கிடையாது. நான் கிளம்பி வந்து பாஜக சார்பாக இருந்தாலும், ஒரு பெண் என்ற முறையில் வந்துள்ளேன்.திருமாவளவன் தேவை இல்லாத விஷயத்தை பேசிட்டு,  பெண்களை இவ்வளவு இழிவாக பேசியதால் போராட்டம் நடத்துகின்றோம்.

தேர்தல் வரப்போகிறது பாஜகவை நோக்கி உங்களால் எதுவுமே குற்றச்சாட்டு சொல்ல முடியாது. பாஜக இந்த அளவுக்கு வளரும் கட்சியாக தமிழகத்தில் உருவாகி கிட்டு இருக்கு. அதுக்காக இந்த  நேரத்தில் வேற ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக ஒரு மதத்துக்கு எதிராக பெண்ணை கேவலப்படுத்துவது மாதிரி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.

என்னைக்கு நீங்கள் பெண்களை மதிக்க கற்றுக்கொள்கிறீர்களோ…  அன்னைக்கு எல்லாருமே உங்களை மதிக்க கற்றுக் கொள்வார்கள்.தைரியமாக நேரடியாக போராட முடியவில்லை. அதனால் தான் எங்களை பயமுறுத்த பார்க்கிறீங்க, எங்களை அச்சுறுத்த பார்க்கிறீர்கள், நாங்கள் எதற்கும் அஞ்ச போவது இல்லை. இங்க தான் இருக்கோம், தைரியம் இருந்தால் நேரடியாக வாங்க விவாதிப்போம் ஆனா இந்த மாதிரி மிரட்டல் போன்ற விஷயங்கள் செய்வது தமிழ் நாட்டுக்கு நல்லதல்ல என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |