Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முட்டை இல்லாம… இவ்ளோ டேஸ்டா… கேக் செய்யலாமா…!!

பேரிச்சம்பழக் கேக் செய்ய தேவையான பொருட்கள்:

பேரீச்சம்பழம்                        – 25
மைதா                                        – 1 கப்
பால்                                             – 3 /4 கப்
சர்க்கரை                                  – 3 /4 கப்
சமையல் சோடா                  – 1 தேக்கரண்டி
எண்ணெய்                               – அரை  கப்
அக்ரூட், முந்திரி                    – தேவையான அளவ

செய்முறை :

முதலில் 25 பேரீச்சம்பழத்தில் உள்ள விதைகளை நீக்கி எடுத்து கொள்ளவும். அதில் பாலை ஊற்றி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

மிக்ஸி ஜாரில் நன்கு ஊறவைத்த பேரீச்சம் பழத்துடன், சர்க்கரை மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

பாத்திரத்தில்  மைதா, சமையல் சோடா இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கி  கொள்ளவும். அதனுடன் அரைத்து வைத்த பேரீச்சம்பழத்தை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக  கலக்கி, மேலும் அதனுடன் அக்ரூட், முந்திரி சேர்த்து கொள்ளவும்.

பேக்கிங் பானில் எண்ணெயை தடவி அதில் கலக்கி வைத்த கலவையை ஊற்றி பரப்பவும். பின்னர் பேக்கிங் பானை மைக்ரோவேவ் ஓவனில் 350 Fல் 35 இருந்து 40 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுத்து ஆறிய பின் பரிமாறினால் சுவையான, இனிப்பான பேரீச்சம்பழ கேக் ரெடி.

Categories

Tech |