Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வெற்றிக்கு அருகில் வந்து தோற்றது ஏமாற்றமளிக்கிறது” கேப்டன் தினேஷ் கார்த்திக்.!!

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது குறித்து கேப்டன் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். 

ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது . இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி  50 பந்துகள் 97* ரன்கள் (9 சிக்ஸர், 7 பவுண்டரி) விளாசினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது.

Seithi Solaiஇதையடுத்து 176 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள்  ரஹானே 34 (21) ரன்களும், சாம்சன் 22 (15) ரன்களும் எடுத்தனர். இதையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  அப்போது ராஜஸ்தான் 6 விக்கெட் இழந்து 15.2 ஓவரில்  123 ரன்கள் எடுத்து இருந்தது.  இதையடுத்து ரியான் பராக்குடன் ஜோப்ரா ஆர்ச்சர் இணைந்து கடைசியில் அதிரடி காட்டி வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

Image

கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி  ஓவரில் ஜோப்ரா ஆர்ச்சர் 4,6 என அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இறுதியில் 19.2 ஓவரில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. பராக் 31 பந்துகள் 47 ரன்களும்  (2 சிக்ஸர், 5 பவுண்டரி), ஜோப்ரா ஆர்ச்சர் 12 பந்துகள் 27* ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணிக்கு இந்த தோல்வியுடன் சேர்த்து தொடர்ந்து 6வது தோல்வியாகும்.

Image

இந்நிலையில் தோல்வி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பேசினார். அப்போது அவர் பேசுகையில் நங்கள் வெற்றி பெறுவோம் என்று நினைத்தேன்  ஆனால் வெற்றி பெற முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது. இது எங்களது நாளாக அமையவில்லை. வெற்றி பெறும்போது எப்போதுமே நல்ல உணர்வை அளிக்கிறது. ஆனால் வெற்றிக்கு அருகில் வந்து தோற்கும்போது ஏமாற்றம் அளிக்கும். ஆர்ச்சர் கடைசி ஓவரில் 2-வது பந்தில் நல்ல ஷாட் அடித்தார். ஆனால் முதல் பந்தில் துரதிர்ஷ்டவசமாக எட்ஜ் ஆகி பவுண்டரி சென்று விட்டது. இதனால் இலக்கை எட்டுவது அவர்களுக்கு எளிதாகி விட்டது. பந்து வீச்சாளர்களின்  மீது அதிக நெருக்கடியை திணிக்க முடியாது. பனியின் தாக்கத்தால் பந்து அதிக ஈரபதமானது. எங்களது அணி வீரர்கள் கடுமையாக போராடிய விதத்தை பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் முடிவை கண்டு மகிழ்ச்சி அடையவில்லை.என்று அவர் கூறினார்.

 

Categories

Tech |