Categories
மாநில செய்திகள்

“எல்லைத் தாண்டி வந்தனர்” தாக்கப்பட்ட மீனவர்கள்….. கண்டனம் தெரிவித்த துணை முதலமைச்சர்….!!

ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்

கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கல் மற்றும் பாட்டில்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து கரை திரும்பினர். இச்சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவில் “எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் . இந்த செயலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |