பன்னீர் பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள்:
பன்னீர் – கால் கிலோ
கடலை மாவு – 1 கப்,
மைதா மாவு _ 1 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு – 1டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் பாத்திரத்தை எடுத்து அதில் பன்னீரை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
மற்றோரு பாத்திரத்தில் கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள்,சீரகம், தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கெட்டியான பதத்தில் கரைத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கி வைத்த பன்னீர் துண்டுகளை எடுத்து கரைத்து வைத்திருக்கும் கலவையில் முக்கியபின் சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
அதனை இரூ புறமும் திருப்பி விட்டு எடுத்து பரிமாறினால் சுவையான பன்னீர் பஜ்ஜி ரெடி .