Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவியை கடத்த முயற்சி… தப்பியும் உயிரிழந்த சோகம்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ …!!

கல்லூரியில் இருந்து வெளியே வந்த பெண்ணை பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

ஹரியானா மாநிலத்தில் இருக்கும் பரிதாபாத் மாவட்டத்தில் மாணவி கல்லூரிக்கு வெளியே கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. நிகிதா என்ற அந்த மாணவி குற்றம்சாட்டப்பட்ட தௌபீக் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்திருந்தார். இந்நிலையில் திங்கள் கிழமை அன்று கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய நிகிதாவை தௌபீக் மற்றும் அவரது நண்பர் காரில் ஏற்ற முயற்சித்தனர். அவர்களிடமிருந்து தப்பித்து நிகிதா அவ்விடம் விட்டு செல்ல முயற்சித்தார்.

அப்போது தௌபீக் நிகிதாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றார். மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவரான தௌபீக் நிகிதாவுக்கு பழக்கமானவர். சில மாதங்களுக்கு முன்பு நிகிதாவின் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர். தௌபீக் நட்பை நிகிதா நட்பை ஏற்றுக் கொள்ளாததால் அவன் இந்த கொடும் செயலை செய்து இருக்கலாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். முன்னதாக தௌபீக் கைது செய்யப்பட்டார்.

Categories

Tech |