இன்றைய கால உலகம் பல்வேறு தொழில்நுட்பங்களை தனதாக்கிக் கொண்டு, முன்னேறி வருகிறது. நிமிடத்திற்கு நிமிடம் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டறிந்து மனித சமூகம் அடுத்த நிலையை நோக்கி செல்லும் அதே வேளையில் தொழில்நுட்பம் சார்ந்து நூதனமான மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்த தவிர்ப்பதற்கு மக்களுக்கு மத்திய அரசு மாநில அரசு பல்வேறு வழிகளையும், விழிப்புணர்வு வழங்கி வருகிறது.
ஆனாலும் இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பொது இடங்களில் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் வைக்கப்பட்டுள்ள இலவச வைஃபை ( WIFI) சேவையில் இதே போல மோசடிகள் நடைபெறுவதாக தற்போது செய்தி வந்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள இலவச வை-பை ( WIFI ) சேவை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என விருதுநகர் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொது இடங்களில் இலவச வைஃபை பயன்படுத்தும்போது உங்கள் தகவல்கள் திருடப்பட்டு, வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படலாம் எனவே மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்