Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சாலை விபத்து” 15% இது தான் காரணம் – கோவை எஸ்.பி தகவல்

வாகனம் ஓட்டுபவர்களின் கவனக்குறைவால் தான் 15 சதவீத விபத்துகள் ஏற்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டதில் கடந்த 2 நாட்களில் அன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். வாகனங்களின் வேகத்தை குறைக்க விபத்து நடந்த இடத்தில் சாலை தடுப்பான்கள் அமைத்து வாகன சோதனை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக இனி அங்கு விபத்து நடைபெறுவது தடுக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி- அக்டோபர் 25-ந் தேதி வரை 1,502 விபத்துகள் ஏற்பட்டு அதில் 382 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல் இந்த ஆண்டில் அதே கால கட்டத்தில் 1,317 விபத்துகள் ஏற்பட்டதில் 297 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த ஆண்டில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதற்கு அபராதமாக ரூ.3 கோடியே 20 லட்சம்  வசூலிக்கப்பட்டு உள்ளது. விபத்து அதிகம் நடந்த பகுதியாக கருமத்தம்பட்டி-மதுக்கரை சோதனை சாவடி வரை உள்ள சாலை தான் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அந்த சாலை இருவழியாக இல்லாமல், ஒரு வழிச்சாலையாக இருப்பதே ஆகும்.

வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால் தான் 15%  விபத்துகள் ஏற்படுகிறது. ஓட்டுநர் ஒருவர் சாலையில் இறந்து கிடந்த நாய் மீது மோதாமல் இருக்க திடீரென்று பிரேக் போட்டதால்  பின்னால் வந்த வேறொரு இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்த பெண் கீழே விழுந்து பலியானார். எனவே  சாலை விபத்துகளில் பலியாவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

இதனால் வாகன ஓட்டிகள் சாலைவிதிகளை முறையாக கடைபிடித்து சாலையில் செல்ல வேண்டும் மற்றும் பின்னால் உட்கார்ந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளின்  பாதுகாப்பை கவனத்தில் கொண்டு சென்றால்  வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறியுள்ளார்.

Categories

Tech |