Categories
சினிமா தமிழ் சினிமா

“ஈஸ்வரன்” 1 இல்ல 2 இல்ல 5 மொழியில் வருவார்….. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

நடிகர் சிம்பு நடிக்கும் படமான ஈஸ்வரன் 5 மொழிகளில் வெளியாகும் தகவல் தெரியவந்துள்ளது. 

தமிழ் திரைத்துறையுலகில்  மிகவும் பிரபலமான நடிகர் சிம்பு .இவர் தற்பொழுது இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகின்றார்.  இது இவரது 46-வது படம்   ஆகும். இப்படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையை 20 கிலோ  குறைத்து தயாராகி  உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும்  என சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில்  தெரித்திருக்கிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக  நடிகை நிதி அகர்வால் நடிக்கின்றார்.  மேலும் பாரதிராஜா, நந்திதா, மனோஜ்,  பால சரவணன், முனிஸ்காந்த் ஆகியோர்  நடிக்கின்றனர்.படம் பொங்கல் பண்டிகை அன்று  திரைக்கு வர இருக்கின்றது.

5 மொழிகளில் சிம்பு படம்

மேலும் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்திலும் சிம்பு நடித்து வருகிறார் இதன் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்னரே தொடங்கிவிட்டனர். இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். கன்னடத்தில் வெளியான முக்தி படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க இருக்கிறார். இதில் கௌதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றார்.



		

Categories

Tech |