ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நபர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஸ்மார்ட் போன்களை வைத்துக்கொண்டு கேம் விளையாடி நேரத்தை போக்கி வருகின்றனர். அவர்கள் ஏனோ சாதாரணமான கேம் விளையாடுவதில்லை. ஆன்லைனில் பணம் செலுத்தி விளையாடும் கேம் அதிகமாக விளையாடப்படுகிறது. இதனால் ஏற்படும் ஆபத்து பற்றி அறிந்திருந்தாலும் இதிலிருந்து பலரும் விலக மறுக்கின்றனர். இந்நிலையில் சென்னை பெரம்பூர் அருகே விழுப்புரத்தை சேர்ந்த குமரேசன் என்பவர் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
இதனால் தனது பணத்தை இழந்த குமரேசன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் தூக்குமாட்டி தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து ஆன்லைன் ரம்மி பலரது உயிரை காவு வாங்கி வரும் நிலையில் அதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.