மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று செயல்களில் நேர்த்தியும், திறமையும் மிகுந்து காணப்படும்.
தொழில் மற்றும் வியாபாரம் சிறந்து மனதில் உற்சாகம் பெறுவீர்கள். சராசரி பணவரவு டன் நிலுவைப்பணம் வசூலாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் இருக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு எதிரிகளின் தொல்லை நீங்கி செல்லும். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது சிறந்தது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணிபுரியுமிடத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
குறிப்பாக எந்திரங்களை இயக்கும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்கள் வெளிநாடுகள் செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ மாணவியர்களுக்கு பாடத்தில் முன்னேற்றம் இருக்கும். இன்று எந்தவொரு முயற்சியில் இறங்கினால் வெற்றியே கிடைக்கும். பேச்சில் கவனம் என்பது கண்டிப்பாக வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது மிகவும் நல்லது.
பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும், அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டுசிறிதளவு அன்னதானத்தை கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்.