கடகம் ராசி அன்பர்களே..!
இன்று சொந்த நலனில் அக்கறை ஏற்படும்.
எதார்த்த பேச்சு சிலரிடம் அதிருப்தியை உருவாக்கக் கூடும். ஒவ்வாத உணவுகளை தயவுச்செய்து உண்ண வேண்டாம். அரசு உதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் வேலையைக்கண்டு மற்றவர்கள் பொறாமை படுவார்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். செல்வநிலை உயரும். வருமானம் தாங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகவே கிடைக்கும்.
உடலில் சிறு உபாதை என்றாலும் உடனே மருத்துவரை அணுகவேண்டும், இதன்மூலம் பெரிய செலவினங்களை குறைக்கலாம். எதிர்பார்த்த பணம் வந்துச்சேரும். விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள நேரிடும். சாதுரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றியும் ஏற்படும். உங்களின் வசீகரமான தோற்றத்தால் காதல் வயப்படக்கூடிய சூழலும் இருக்கும்.
மாணவ கண்மணிகளுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். கல்வியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். மேற் கல்விக்கான முயற்சியில்கூட வெற்றி வாய்ப்புகள் இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமான சூழ்நிலை இருக்கும். காதலில் உள்ளவர்கள் திருமணத்திற்கான ஏற்பாடு செய்யுங்கள், வெற்றிப்பெறும் நாளாகவே இருக்கும்.
முக்கியமான வேலையில் ஈடுபடும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும், அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியம் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் நீல நிறம்.