சிறை கைதி எஸ்டிபிஐ உடன் வைரமுத்து இருப்பதுபோன்று வரைந்த ஓவியத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் இருக்கும் மத்திய சிறையில் கைதியாக இருப்பவர் வைரமுத்துவிற்கு பரிசு ஒன்றை வழங்கினார். அது அவர் கைப்பட வரைந்த ஓவியம் ஆகும். தற்போது சமூக வலைதளத்தில் அந்த ஓவியம் வைரலாக பரவி வருகிறது. கோயம்புத்தூரை சேர்ந்த பாதமுத்து என்பவர் ஆயுள் தண்டனை பெற்ற சிறைக் கைதியாக சிறையில் இருந்து கொண்டு ஏராளமான ஓவியங்களை வரைந்து வருகிறார்.
அவ்வகையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி மற்றும் வைரமுத்து சேர்ந்து இருப்பது போன்ற ஓவியத்தை வரைந்து சிறை கண்காணிப்பாளர் அனுமதியுடன் வைரமுத்துவுக்கு அனுப்பி வைத்தார். இதனைப் பார்த்த வைரமுத்து நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அப்பதிவில் எஸ்பிபியும் நானும்… மதுரை மத்திய சிறை கைதி பாத முத்துவின் கை வண்ணம் கண்டேன்; கண்ணீர் கொண்டேன். சிறை செய்ய முடியுமோ சித்திரத்தை? நன்றி என பதிவிட்டு இருந்தார்.