Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை வாங்கிய சிறுவன்..! மருந்தக உரிமையாளர் கைது…!!

சென்னை கொடுங்கையூர் அருகே 5 ரூபாய் வலி நிவாரண மாத்திரையை போதைக்காக 800 ரூபாய்க்கு கள்ளத்தனமாக விற்ற மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அடுத்த  கொடுங்கையூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கஞ்சா புகைத்த சிறுவனிடம்  காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். சிறுவன் மழுப்பவே சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்திய போது வலி நிவாரண மாத்திரைகள் உட்கொண்டது ஒப்புக்கொண்டார். பின்னர் சிறுவனிடம் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வருமாறு பணத்தை கொடுத்து காவல்துறையினர் அனுப்பியுள்ளனர்.

இதை அடுத்து முத்தமிழ் நகர் 5வது மெயின் சாலையில் உள்ள மருந்தகம் ஒன்றிருக்க சென்ற அந்த சிறுவன் ஐந்து ரூபாய் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரையை 800 ரூபாய் கொடுத்து வாங்கி வந்துள்ளான்.

இதையடுத்து அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் கடைக்குள் புகுந்து சோதனை  செய்ததில் 170 வலி நிவாரண மாத்திரைகள் 25க்கும் மேற்பட்ட வலி நிவாரண மருந்துகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மருந்தக உரிமையாளர் மோகனை கைது செய்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |