Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் ,துணை முதலமைச்சர் நேரில் அஞ்சலி ….!!

தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் வரும் வெள்ளிக்கிழமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

சுதந்திரப் போராட்ட வீரரான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 103-வது ஜெயந்தி மற்றும் 58-வது குருபூஜை இன்று காலை பூஜைகளுடன் தொடங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆன்மிக விழா மற்றும் அரசியல் குருபூஜை என்று மூன்று நாட்களுக்கு நிகழ்ச்சிகள் நடக்கப்படுகிறது. ஜெயந்தி  விழாவின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை குருபூஜை அன்று காலை 8.45 மணி அளவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். அவர்களுடன் தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ. எஸ் மணியன், விஜய்ய பாஸ்கர், ஆர்.பி உதயகுமார் மற்றும் க. பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Categories

Tech |