நான்கு குழந்தைகளுக்கு தாயான பெண் அதில் ஒரு குழந்தையை விற்று மற்ற குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்துள்ளார்.
ரஷ்யப் பெண் சிசேனாவுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் நான்காவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தையை குழந்தை இல்லாத தம்பதியரிடம் விற்று 250 பவுண்டு( பணத்தை வாங்கிக் கொண்டு மற்ற மூன்று குழந்தைகளுக்கு திண்பண்டம் மற்றும் ஆடைகளை வாங்கியுள்ளார். அவருக்கு குழந்தை தற்போது தான் பிறந்தது என்பது குழந்தை நல அலுவலர்களுக்கு தெரியும் என்பதால் குழந்தை காணாமல் போனதை அறிந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசாரின் விசாரணையின் போது சீசேனா கூறுகையில், “எனக்கு என் குழந்தையை கொடுத்தது பிடிக்கவில்லை, அவர்கள் என் குழந்தையை திருப்பிக் கொடுத்தால் வாங்கிக் கொள்வேன், குழந்தையை வாங்குவதற்காக பலமுறை அவர்களுக்கு தொடர்பு கொண்டபோது என் அழைப்பை எடுக்கவில்லை” என்று கூறினார்.
இந்நிலையில் போலீசார் அத்தம்பதியினரை பிடித்து குழந்தையை அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். இச்சம்பவத்துக்கு காரணமான சிசேனா மற்றும் குழந்தை இல்லாத தம்பதியினர் மூவருக்கும் பதினைந்து வருட கால தண்டனை வழங்கபடலாம் என போலீசார் கூறியுள்ளனர்.