Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு எஃப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்…!!

இந்திய கடற்படைக்கு எஃப் 18 ரக போர் விமானங்கள் மற்றும் நவீன ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகள் இடையே நேற்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில் இந்திய கடற்படையின் பயன்பாட்டிற்காக எஃப் 18 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது. ஆளில்லா விமானங்கள் உட்பட நவீன ஆயுதங்களையும் விற்க முன் வந்துள்ளது.

இந்தியக் கடற்படையில் தற்போதுள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் கட்டுமானத்தில் உள்ள விமானம் தாங்கி கப்பலிலிருந்து தாக்குதல்களுக்கு பயன்படுத்த 57 போர் விமானங்கள் விரைவில் வழங்கப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |